What are you looking for?

அங்கஜன் இராமநாதன்

அரசியல்வாதி

அறிமுகம்

தமிழ் மக்கள் இலங்கை தீவின் சுதேச குடிமக்கள், அவர்கள் வடக்கு கிழக்கில் தனியான தாயகம், மொழி, பண்பாடு, கலாசார வரலாற்றை கொண்ட தேசிய இனம் என்பதை ஏற்றுக்கொண்டு சுதந்திரம் பெற்ற நாள் முதல் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் தமது சுயநிர்ணய உரிமைகளை பெறுவதற்காகவும் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் நியாயமானது என்பதை அங்கீகரித்து ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 வருடங்கள் கடந்த பின்னரும் தமிழ் மக்களுக்கு எதிராக பாகுபாடுகள், அநீதிகள் தொடருகின்றன என்பதையும் அவர்கள் தொடர்ந்தும் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொண்டு இறுதி யுத்தத்தில் நடந்தவை பற்றி பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றினூடாக நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு நிலையான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற தமிழ்மக்ளின் வலியுறுத்தல்களை புரிந்துகொண்டு எந்த சந்தர்ப்பத்திலும் தமிழ் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்துக்கு எதிராகவோ அல்லது அதனை கொச்சைப்படுத்தும் வகையிலோ செயற்படவில்லை என்பதையும் எதிர்காலத்திலும் அவ்வாறு செயற்படமாட்டேன் என்றும் உறுதி கூறிக்கொண்டு உரிமைகளுக்கான போராட்டத்துக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த அத்தனை உறவுகளையும் மிகுந்த மரியாதையுடனும் பயபக்தியுடனும் நினைவுகூர்ந்து தமிழ் மக்கள் தாம் விரும்பும் அரசியல் தீர்வு ஒன்றினை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ளும் ஜனநாயக ரீதியான அத்தனை முயற்சிகளுக்கும் பக்கபலமாகவும் அனுசரணையாகவும் செயற்படுவேன் என்று உறுதி கூறி அரசியல் தீர்வுகான முயற்சிகள் ஒருபுறம் நடைபெற எமது மக்களை பொருளாதார , சமூக மற்றும் கலாசார ரீதியாக வலுவூட்டுவது மிக மிக அவசியம் என்பதையும் இதன்பொருட்டு தமிழ் மக்கள் மிகவும் சாணக்கியமான முறையில் அரசாங்கங்களை பயன்படுத்தி செயற்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி சிறந்த உபாயங்களை வகுத்து துடிப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுவேன் என்று வாக்குறுதியளித்து அடுத்த 5 வருடங்களில் யாழ், கிளிநொச்சி மாவட்டங்களை முதல்நிலை மாவட்டங்களாக்கும் 'என் கனவு யாழ்” என்ற நடைமுறை சாத்தியமான செயல்திட்ட வரைவினை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

அரசியலில் நான்

2010 அரசியல் பிரவேசம்

முதல் முறையாக 2010ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிரதிநித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிட்டு 3461 வாக்குகளை பெற்றேன்.

2010 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர்

யாழ் மாவட்டத்தில் 2010ம் ஆண்டு முதலாவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சி அலுவலகத்தை நிறுவி அதே ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ் மாவட்ட அமைப்பாளர் நியமிக்கப்பட்டேன்.

2013 மாகாண சபை உறுப்பினர்

நடைபெற்ற வட மாகாணசபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதுவப்படுத்தி போட்டியிட்டு 10,034 வாக்குகள் பெற்று வட மாகாண சபைக்கு தெரிவானேன்.

2015 பாராளுமன்ற உறுப்பினர் (தேசிய பட்டியல்)

இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதுவப்படுத்தி போட்டியிட்டு 17,309 வாக்குகளை பெற்று தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டேன்.

2015 யாழ் , கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவர்

பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட நான் 2015ம் ஆண்டே எனது தேர்தல் மாவட்டத்தில் (யாழ், கிளிநொச்சி) மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு இணைத்தலைவராக நியமிக்கப்பட்டேன்.

2015 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மாவட்ட தலைவர்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டேன்.

2018 பிரதி விவசாய அமைச்சர்

கமத்தொழில் பிரதியமைச்சராக பெறுப்பேற்றேன். 140 நாட்கள் பிரதி அமைச்சராக கடமையாற்றி யாழ், கிளிநொச்சி விவசாய மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்தேன்.

2018 ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதித் தலைவர்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அகில இலங்கை ரீதியாக பிரதித்தலைவராக நியமிக்கப்பட்டேன்.

2019 ஜனாதிபதியின் விசேட திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர்

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் விசேட செயற் திட்டங்களின் ஒருங்கிணைப்பாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன். (கிராமசக்தி, போதைப்பொருள் ஒழிப்பு, சிமாட் ஸ்ரீலங்கா போன்றதிட்டங்கள்)

2019 யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர்

யாழ் மாவட்டத்தில் இடம் பெறுகின்ற அபிவிருத்தி திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டேன்.