தொழிநுட்பத்தினால் உலகமும், பல்வேறு நாடுகளும், சமூகங்களும் அடைந்த துரித வளர்ச்சியை நேரில் பார்த்தவன் நான். தொழில்நுட்பம் எமது சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய காத்திரமானதும் ஆக்கபூர்வமானதுமான பங்களிப்பை ஆழமாக புரிந்துகொண்டவன் என்ற ரீதியில், தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி ஒவ்வொரு தனிமனிதனினதும், சமூகத்தினதும் வினைத்திறனை அதிகரிக்க 'டிஜிட்டல்-யாழ்' என்ற திட்டத்தினூடாக பின்வரும் செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளேன்.
'மின்னணு ஆளுக ஆட்சி' (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள், படிமுறைகள் மற்றும் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை செயல்படுத்துவேன். அத்தியாவசிய தேவைகளான சுகாதாரம், போக்குவரத்துக்கு, கல்வி போன்ற துறைகளிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்க இலத்திரனியல்-சேவை (e-service) முறைகளை நடைமுறைப்படுத்துவேன். பணப்பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் இலத்திரனியல்-கட்டணம் (e-payment) முறைமையை அறிமுகப்படுத்துவேன். இத்திட்டத்தினூடாக எமது மக்களினது பணநிர்வாகம், பணப்பரிமாற்றம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் என திடமாக நம்புகின்றேன். மேலும் எமது பொருளாதாரத்தை துரித வளர்ச்சி பாதையில் இட்டுசெல்லும் பொருட்டு உள்ளூர் தொழில்முனைவர்களை உருவாக்குவதற்கு 'startup-யாழ்' என்ற திட்டத்தையும், யாழ், கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பான தரவுகளை ஆவணப்படுத்துவதற்கு இலத்திரனியல்-தரவுத்தளம் ஒன்றினை 'digital-database' என்ற திட்டத்தினூடாக செயற்படுத்துவேன்.
எமது அழிந்து போன பொருளாதாரத்தை வினைத்திறனாக கட்டியெழுப்புவதற்கு தயாரிப்பு மற்றும் சேவை துறையினூடாக தொழில்முனைவர்களை ஊக்குவித்து தொழில்நுட்பம் சார்ந்த 'ஸ்டார்ட் அப்' களை உருவாக்கி அந்நிய செலாவணியை எமது பிரதேசத்திற்கு கொண்டு வருவதே சாலச் சிறந்த பொறிமுறையென நான் கருதுகிறேன். இதற்காக அத்துறை சார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இணைத்து ஒரு செயலணியை அமைத்து ஆக்கபூர்வமான பிரதிபலன்கள் எட்டும் வரை செயற்படுவேன்.
ஸ்டார்ட் அப் தொடர்பான விழிப்புணர்வை தொழில்முனைவர்கள், இளைஞர்கள், பெண்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துதல், அது தொடர்பான கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை 'ஸ்டார்ட் அப்' தொடர்பாக முன்னனுபவம் கொண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாழ் நிபுணர்களின் உதவிகளினூடாக செயல்படுத்துதல்.
தொழில்முனைவர்கள் 'startup' தொடர்பான செயற்பாடுகளை வினைத்திறனாக முன்னெடுத்து செல்வதற்கும் ஸ்டார்ட் அப் சூழலியல் அமைப்பைக் (startup eco-system) கட்டியெழுப்புவதற்குமான நிலைபேறான உள்ளக கட்டமைப்பை விருத்தி செய்தல். இதன் பொருட்டு இணைந்து வேலை செய்யும் இடங்கள் (co-working spaces), Incubator மற்றும் Accelerator செயற்திட்டங்களை அறிமுகப்பபடுத்தலாம் என எண்ணியுள்ளேன்.
தொழிநுட்பம் சார்ந்த ஸ்டார்ட் அப் முயற்சிகளில் ஈடுபடும் தொழில்முனைவோருக்கு விசேட முதலீட்டு தொகையை பெற்று கொடுப்பதற்கு அரசிற்கு காத்திரமான அழுத்தத்தை பிரயோகித்தல்.
ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு முதலீட்டாளர்கள்(Investors) வழிகாட்டுதல்கள் (Mentoring), தயாரிப்பை மேம்படுத்துதல் (Product Development), பட்டய கணக்காளர்கள் (Chartered Accountants), வழக்கறிஞர்கள் (lawyers), மற்றும் தொழிநுட்ப வல்லுநர்களை ஒருங்கிணைத்து வலைபின்னலொன்றை உருவாக்குதல். இதனூடாக தொழில்நுட்ப ஸ்டார்ட் அப்கள் உள்நாட்டு சந்தையிலும் வெளிநாட்டு சந்தையிலும் அதிவேகமாக வளர்வதற்கு தேவையான உதவிகளையும் ஏற்படுத்தி கொடுத்தல்.
தெற்கிலும் வெளிநாடுகளிலும் வெற்றிகரமாக இயங்கி கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கிளைகளை யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நிறுவுவதற்கு ஆணித்தரமானமுயற்சி செய்தல். இதனூடாக புதிய ஸ்டார்ட் அப் கலாச்சாரத்தை உருவாக்குவதோடு, தொழில்நுட்பம் சார்ந்த இளைஞர், யுவதிகளுக்கு புதிய வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு வழிசமைத்தல்.
இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.
சமர்ப்பிஅத்தியாவசிய தேவைகளான சுகாதாரம், போக்குவரத்துக்கு, கல்வி போன்ற துறைகளிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்க இலத்திரனியல்-சேவை (Digital Services) முறைகளை நடைமுறைப்படுத்துவேன்.
அத்தியாவசிய தேவைகளான சுகாதாரம், போக்குவரத்துக்கு, கல்வி போன்ற துறைகளிலுள்ள நடைமுறைச் சிக்கல்களை இலகுவாக்க இலத்திரனியல்-சேவை (Digital Services) முறைகளை நடைமுறைப்படுத்துவேன்.
டிஜிட்டல் சேவைகளை பெற்றுக் கொள்ளவதற்கான நிகழ்நிலை இயங்குதளம் மற்றும் செயலிகளை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு அறிமுகம் செய்தல். இவ்வாறான சேவைகள் குறைந்த சேவைக்கட்டணம் ஊடக மக்களை சென்றடைவதை உறுதிப்படுத்தல்
தொழில் துறையில் அடுத்த கட்ட வளர்ச்சியை எட்ட துடிக்கும் சிறிய நடுத்தர நிறுவனம் தொழில் நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாக செயலி மற்றும் மென்பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்தல்.
இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.
சமர்ப்பிடிஜிட்டல் ஆளுக ஆட்சி' (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள், படிமுறைகள் மற்றும் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை செயல்படுத்துவேன்
மின்னணு ஆளுக ஆட்சி' (digital governance) திட்டத்தினூடாக அரச நிறுவனங்கள், திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் இதர அலுவகங்களில் நடைபெறும் நாளாந்த அலுவல்கள், படிமுறைகள் மற்றும் செயற்பாடுகளை கணனிமயப்படுத்துவதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பித்து அதனை செயல்படுத்துவேன்.
அன்றாட அரச அலுவல்கள் மற்றும் நடவடிக்கைகளை கணனிமயமாக்குவதினால் ஏற்படக்கூடிய அனுகூலங்களை சாதாரண பொதுமக்களுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் தெளிவு படுத்துவதற்கு செயலமர்வுகளை ஒழுங்கு செய்தல்.
வெவ்வேறு அரச நிறுவனக்களுக்கிடையிலான சேவை வழங்கல் பொறிமுறையை பொதுவான இளங்குதளத்தில் ஏற்படுத்தி கொடுத்தல். இதனூடாக பொதுமக்களினதும் அரச உத்தியோகத்தினரினதும் பொன்னான நேரம் வீண்விரயமாவதை உறுதிப்படுத்தல்
இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.
சமர்ப்பியாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் தற்போதைய சமூக, பொருளாதார நிலைமை தொடர்பான புள்ளிவிபரங்கள், இயற்கைவளம், குடியியல், அபிவிருத்தி திட்டங்கள், வியாபார பரிந்துரைகள் தொடர்பான தரவுகளை நிகழ்நிலை இணையத்தளம், திறன் செயலினூடாக அனைவருக்கும் கிடைக்க கூடிய வகையில் முயற்சிகளை மேற்கொள்ளுதல். இது எமது பிரதேசத்தின் இன்றைய நிலையை உணர்ந்து எதிர்கால அபிவிருத்திக்காக ஆக்கபூர்வமான செயற்பாட்டில் ஈடுபட எத்தனிப்போருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என நம்புகின்றேன்.
தேசிய பொது தகவல் தரவுத்தளத்துடன் ஒன்றித்து செல்லக்கூடிய உள்ளக தரவுத்தளத்தை நிபுணர்களின் உதவியுடன் செயல் வடிவம் பெற செய்தல். இதற்கான தரவுகளை சேமிப்பதற்கு பிரத்தியேக குழாமினை அமைத்து யாழ் கிளிநொச்சி மாவட்டங்கள் தொடர்பான சகல தரவுகளையும் ஆவணப்படுத்துதல்
யாழ், கிளிநொச்சி மாவட்டம் தொடர்பான புவியியல், இயற்கைவளம், பொருளாதாரம், குடியியல், அபிவிருத்தி திட்டங்கள், வியாபார பரிந்துரைகள் தொடர்பான தரவுகளை ஆவணப்படுத் துதல். இதனூடாக யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் வளர்ச்சியில் பங்கெடுக்க விரும்புவோருக்கு எமது பிரதேசம் தொடர்பான ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்துதல்
இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.
சமர்ப்பிஇன்றைய இளைஞர் யுவதிகள் மத்தியிலுள்ள வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினையின் உண்மைத்தன்மையை நன்கறிந்தவன் நான்.
தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியுடன் அரச, தனியார் வேலைவாய்ப்புகளை ஆவணப்படுத்துவதற்குரிய இயங்குதளத்தை மக்களின் பாவணைக்கு அறிமுகப்படுத்துதல். இதனூடாக தொழில் வழங்குநர்களையும், ஆயிரக்கணக்காண வேலையில்லாத இளைஞர், யுவதிகளை ஒரு புள்ளியில் இணைத்து அவர்களுக்கான வேலைவாய்ப்புக்களை அதிகரித்தல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வாழ் தமிழர்களிடையே இவ்வியங்குதளத்தை பிரபல்யப்படுத்துவதற்கு சந்தைப்படுத்தலுக்கான மூலோபாயா பொறிமுறையொன்றை வகுத்தல். இதனூடாக உள்நாட்டில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலுள்ள தொழில்வாய்ப்புக்களையும் ஆவணப்படுத்தி அத்தொழில் வாய்ப்புகளை எமது மக்களும் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்தல்.
இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.
சமர்ப்பிபணப்பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் இலத்திரனியல்-கட்டணம் (digital -payment) முறைமையைஅறிமுகப்படுத்துதல். இத்திட்டத்தினூடாக எமது மக்களினது பணநிர்வாகம், பணப்பரிமாற்றம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் என திடமாக நம்புகின்றேன்.
பணப்பரிமாற்றம், கொடுக்கல் வாங்கல்களின் வினைத்திறனை அதிகரிப்பதற்கும், இலகுபடுத்துவதற்கும் இலத்திரனியல்-கட்டணம் (digital -payment) முறைமையை அறிமுகப்படுத்துதல். இத்திட்டத்தினூடாக எமது மக்களினது பணநிர்வாகம், பணப்பரிமாற்றம் மற்றும் கொடுக்கல் வாங்கல் தொடர்பான பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு எட்டப்படும் என திடமாக நம்புகின்றேன்.
இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.
சமர்ப்பி