What are you looking for?

அறிவுபூர்வமான, சக்திமிக்க மகளிர், இளைஞர்களின் எதிர்காலம்

இன்றைய இளைஞர்களிடத்தில் காணப்படும் ஆக்கபூர்வமான விடயங்களோடு ஆற்றல் திறமைகளை இணைத்து எதிர் மறை எண்ணங்களை மறைத்து புதிய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்வேன். வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில்நுட்பக் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்களுக்கூடாக அவர்களின் திறனாற்றல் விருத்தியூடாக வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பேன். இதனால் அவர்கள் சிறந்த எதிர்காலத்தை நோக்கி வழிப்படுத்தப்படுவதுடன் குறிப்பாக போதையற்ற, வன்முறையற்ற இளம் சமுதாயம் மீளுருவாக்கம் செய்யப்படும். கிராமிய ரீதியில் மாதர் சங்கங்களுடன் இணைந்து பெண்களுக்கான சிறப்புக் குழுக்களை உருவாக்குவேன். தற்காலத்தில் பெண்களுக்கு பெருஞ்சுமையாகக் காணப்படும் குடும்ப வன்முறைகள், தொழிலுக்கேற்ற ஊதியமின்மை, நுண்கடன் சார் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காணும் வழிமுறைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்கி, அவற்றிக்கான தீர்வைப் பெறக் கூடிய நிறுவன இணைப்புக்களும் ஏற்படுத்திக் கொடுப்பேன்.

கிராமிய மட்ட ரீதியான விளையாட்டுக் கழகங்கள் வலுப்படுத்தப்படுவதுடன் சீரான கால இடைவெளிகளில் சந்திப்புகளை ஏற்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்வேன். விளையாட்டில் ஆர்வமான இளைஞர் யுவதிகளுக்காக அனைத்து வசதிகளுடனும் கூடிய சர்வதேச தர விளையாட்டு மைதானம், உள்ளக விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கு பரிந்துரைப்பேன். கிரிக்கட், உதைபந்தாட்ட, தடகளப்போட்டிகளில் திறமையான வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை ஏற்பாடு செய்து யாழ், கிளிநொச்சி மாவட்டங்களை விளையாட்டில் தேசிய ரீதியில் முதலிடத்திற்கு கொண்டு செல்ல பாடுபடுவேன். சிறந்த பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதனூடாக திறமையான வீர, வீராங்கனைகளை உலக அரங்கில் பிரகாசிக்க வைப்பதற்கான முயற்சிகளை ஆக்கப்பூர்வமாக முன்னெடுப்பேன்.

இளம் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப விவசாயச் செய்கை தொடர்பான செயற்திட்டத்தை அறிமுகப்படுத்துவதுடன் புதிய தொழில்நுட்ப கருவிகளை மானிய அடிப்படையில் பெற்றுக்கொள்ள வழிவகை செய்வேன். மேற்படி பொருத்தமான பொறிமுறைகள் மூலமாக கிராமங்களிலிருந்து நகரம் வரைக்கும் சாதிக்கத்துடிக்கும் இளையோர்களையும், மகளிர்களையும் இனங்கண்டு உலகுக்கு அறிமுகம் செய்வேன்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

 • வழி தவறி போகும் இளைஞர்களுக்கான வழிகாட்டலும், வன்முறைசார்ந்த குழுக்களை இனம் கண்டு வன்முறையற்ற பிரதேசமாக்கல்

  தொழில்நுட்பக்கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சிக்கூடங்களை மேலதிகமாக நிறுவி இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு பல துறைகளிலும் சிறப்புப்பயிற்சி வழங்கி திறமையுள்ள மனிதவளங்களை சிறப்பான எதிர்காலத்திற்காக தயார்ப்படுத்தல். குறிப்பாக பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை உருவாக்கி பயிற்சிகளை வழங்கி அவர்களின் திறமைகளை பயனுள்ளதாக்குதல்.

  மற்றும் வன்முறையை தூண்டி மக்களின் அமைதியான வாழ்வை சீர்குலைக்கும் அனைத்து வன்முறையாளர்களையும் இனம்கண்டு சட்டரீதியாக தண்டிப்பதோடு மீண்டும் வன்முறையில் ஈடுபடாமல் இருக்க கண்காணிப்பு பொறிமுறையொன்று உருவாக்கப்படும்.

  இளைஞர்களுக்கு இடையில் வன்முறை கலாச்சாரம் யாழ் மாவட்டத்தில் மேலோங்கி இருப்பது ஒரு (Post war Syndrome) யுத்தத்திற்கு பிந்திய பாதிப்பாக நாம் அடையாளம் கண்டிருக்கிறோம். துரதிஸ்டவசமாக தவறான கடந்த காலத்தை கொண்டவர்கள் கூட மிகச்சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தி கொள்ள முடியும் என்பதை நாம் திடமாக நம்புகிறோம். “Some times people with the worst past endup creating the best future” வன்முறையாளர்களாக சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும் இளைஞர்கள் தொடர்பாக அவர்களுடைய பெற்றோர், பாதுகாவலர், அவர்கள் வாழும் பிரதேசத்தின் மதிப்பிற்குரியோர், காவல்துறை போன்றவர்களை இணைத்து கொண்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு திருந்தி வாழ நினைப்பவர்களுக்கு சமூக இணைப்பிற்கு தேவையான வளங்கள் சூழல் சந்தர்பங்கள் உருவாக்கி தரப்படும்

  இதே நேரம் ஒரு சில வன்முறையாளர்களால் ஒடடுமொத்த யாழ் மாவட்ட இளைஞர் சமூகமும் துன்புறுத்தபடாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும், சட்டவிரோத கைதுகள் துன்புறுத்தல் நடவடிக்கைகள், சுதந்திரமாக நடமாடுவதை தடுக்கும் நடவடிக்கைகள் என்பன குறித்து கரிசனை செலுத்துவோம்.

  பொலிஸ் , நிதித்துறை, சிறைச்சாலை இவற்றில் இடம்பெறும் ஊழல் மோசடிகள் துஷ்பிரோயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படும்.

 • பெண்களுக்கான சிறப்பு குழுக்களினை உருவாக்கல்

  யுவதிகளின் எதிர்காலத்தினை தாமே தீர்மானிக்கும் பொருட்டு பெண்களுக்கான சிறப்பு குழுக்களினை உருவாக்கி கிராமங்கள் தோறும் மாதர் சங்கங்களுடன் இணைந்து செயற்படல். பெண்களின் தனியான பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடாத்தி உறுதியான பெண்தலைமைகளை உருவாக்குதல்.நுண்நிதி கடன்களால் பாதிக்கப்பட்டிருக்கும் குறிப்பாக பெண் தலைமைத்துவத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களுக்கு இக்கடன்கள்யாவிலிருந்தும் மீண்டுவர பொறிமுறையொன்றை நாம் உருவாக்கியுள்யோம். தனியார் வங்கிகளிலும் ஏனைய நிதி நிறுவனங்களிலும் அதிதமான வட்டிக்கு இப் பெண்களால் எடுக்கப்பட்டிருக்கும் கடன்கள் யாவும் ரத்து செய்யப்பட்டு கூட்டுறவு வங்கிகள் மூலமாக வட்டியில்லாமல் மீளச்செலுத்த வழிவகைள் செய்யப்படும்

  யாழ் மாவட்டத்தில் பணியிடங்களில் ஒரே வேலைக்கு ஆண்களுக்கு வழங்கப்படும் சம்பளத்திலும் பார்க்க மிகக்குறைந்த அளவு சம்பளமே பெண்களுக்கு வழங்கப்படுவது நாம் அவதானித்துள்ளோம். ஆணுக்கு வழங்கப்படும் சம்பளமே பெண்ணுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை விஷேட சட்டமாக்க பாராளுமன்றத்தில் நாம் பேசுவோம்.

  பெண்களுக்கு எதிரான சகலவிதமான ஒடுக்கு முறைகளும் வன்முறைகளும் தொடர்பாக முறைப்பாடு இட, ஆலோசனை பெற , சட்ட வழிகாட்ட 24 மணிநேரம் இயங்கும் வளநிலையங்கள் (resource center) யாழ் மாவட்துக்குள் உருவாக்கப்படும்.

 • இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தலைமைத்துவப்பயிற்சி வழங்கல்

  தெரிவுசெய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு தலைமைத்துவப்பயிற்சி, முதலுதவிப்பயிற்சி மற்றும் காத்திரமான பயிற்சிகளை வழங்கி உறுதியான எதிர்கால சந்ததியை உருவாக்குதல்

 • சாதாரணதரப்பரீட்சையில் சித்தியடைய தவறிய மாணவர்களுக்கு விஷேட தொழில் பயிற்சி மற்றும் பயிற்சிகூடங்களை உருவாக்கல்

  சாதாரண தரத்தில் சித்தியடையத்தவறிய மாணவர்களை இனங்கண்டு அவர்களுக்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்படும் தொழிற்பயிற்சிக்கூடங்களுக்கு உள்ளீர்த்தல். விசேட துறைகளில் போதிய தொழிற்பயிற்சிகளை வழங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கிக்கொடுத்தல்.

  பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்கள், பண பலம் அரசியல் பலம் அதிகார பலம் அற்ற நலிவடைந்தவர்களுக்கு சகலவிதமான அசர நிவாரணங்கள் வேலைவாய்ப்புக்கள் கற்கை நெறிகள் அனைத்திலும் அதிக முன்னுரிமை அளிக்கப்படும்.

 • கல்விசாரா செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு விசேட செயலமர்வுகளை நடாத்தல்

  கல்விசாரா செயல்பாடுகளில் ஆர்வமுள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு விசேட செயலமர்வுகளை நடாத்தி ஆர்வமுள்ள துறைகளில் மிளிர உறுதுணையாயிருத்தல்

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

 • சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தினை யாழில் அமைத்தல்

  அனைத்து வசதிகளுடன் கூடிய சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தினை யாழில் அமைத்து கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடும் இளைஞர் மற்றும் யுவதிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தல். தேசிய அளவில் எம்மவர்களும் பிரகாசிக்க சர்வதேச தரம் வாய்ந்த கிரிக்கெட் விளையாட்டு கட்டமைப்புகளை உருவாக்கி திறமையான வீரர்களுக்கு விசேட பயிற்சிகளை சர்வதேச தரத்தில் வழங்கி எம் இளையோரை உலக கிரிக்கெட் அரங்கில் பிரகாசிக்க வைத்தல்

  கொழும்பில் உள்ள சுகதாச உள்ளக சர்வதேச விளையாடடு அங்கு போன்று யாழ் மாவட்டதில் அடுத்த ஐந்து வருடத்திற்குள் அமைக்கபடும்.

  அனைத்து கிராமிய மட்டங்களிலும் விளையாட்டு கழகங்கள் உருவாக்கப்படும். தெற்கில் உள்ள விளையாட்டு கழகங்களுடன் போட்டிகள் ஒழுங்கமைத்து தரப்படும்.

 • பெண்கள் கிரிக்கெட்டினை மேம்படுத்த கிராமங்கள்தோறும் பயிற்சி வழங்கல்

  நலிவடைந்து போயிருக்கும் பெண்கள் கிரிக்கெட்டினை மேம்படுத்த கிராமங்கள் தோறும் பெண்கள் கடினப்பந்து கிரிக்கெட் விளையாட்டினை பிரபல்யப்படுத்தல். அதற்கு முன்னோடியாக 10 கிராமங்களை தேர்வு செய்து அங்குள்ள விளையாட்டுக்கழகங்களுடன் சேர்ந்து பெண்கள் கிரிக்கெட் அணிகளை உருவாக்குதல். மேலதிகமாக விளையாட்டு உபகரணங்கள், பயிற்சியாளர்கள் மற்றும் மைதான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல். இதனூடு அடுத்த சில வருடங்களுக்குள் முதலாவது யாழ் வீராங்கனையை தேசிய அணியில் இடம்பெறச்செய்தல்.

 • தேசிய உதைப்பந்தாட்ட அணியில் எம்மவர்களையும் இணைவதை உறுதிசெய்தல்

  இலங்கையில் தேசிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் முன்னிலை வகிக்கும் உதைபந்து விளையாட்டினை மேலும் முன்னோக்கிக்கொண்டு சென்று தேசிய அணிகளில் தொடர்ந்து எமது பங்கிருப்பதனை உறுதிசெய்தல்

 • தேசிய ரீதியில் தடகளப்போட்டிகளில் முன்நோக்கி செல்லல்

  தேசிய ரீதியில் தடகளப்போட்டிகளில் பின்தங்கிய நிலைமையை மாற்றி யாழ் மாவட்டத்தை தேசிய மட்டத்தில் முன்னோக்கி கொண்டுசெல்லுதல். அதற்கென மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களுக்கு விசேடமாக பயிற்சிகளை ஏற்பாடு செய்தல்.

 • யாழ் மாவட்ட ரீதியில் விளையாட்டுக்கழகளின் குறைகளை நிவர்த்தி செய்தல்.

  யாழ் மாவட்ட ரீதியில் விளையாட்டுக்கழகங்களுடன் சிறப்பு சந்திப்புக்களை சீரான கால இடைவெளிகளில் ஏற்படுத்தி குறைகளை நிவர்த்தி செய்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

 • புதிய தொழில்நுட்பத்தை கற்ற இளம் விவசாயிகளை உருவாக்கல்

  கிராமங்கள் தோறும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இளம் விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தல். அடுத்த சந்ததி விவசாயிகளாய் மாற புதிய தொழில்நுட்பம், புதிய விவசாய முறைகள், விதைகள் மற்றும் கிருமிநாசினிகள் பற்றிய செயற்திட்டம் ஒன்றை அறிமுகம் செய்தல்.

  புதிய விவசாய தொழிநுட்ப கருவிகள் விவசாயிகளுக்கு பெற்றுதரப்படும்.

  இனம்காணப்பட்ட திறன்மிக்க விவசாயிகளுக்கு வெளிநாடுகளுக்கு சென்று அங்கு பயன்படுத்தப்படும் நவீன விவசாயம் சார்ந்த தொழில்நுட்ப பயிற்சிகளில் பங்கேற்கும்ட வாய்ப்புக்கள் ஒழுங்கமைத்து தரப்படும். வருடத்திற்கு நூறு பேர் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

 • இளம் விவசாயிகளை அனம் கண்டு கௌரவித்தல்

  வருடா வருடம் யாழின் அதிசிறந்த இளம் விவசாயியை அடையாளம் கண்டு அவருக்குரிய கௌரவத்தை அளித்து தேசிய ரீதியில் அறிமுகம் செய்து வைத்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி