What are you looking for?

அரசியல் தீர்விற்கான ஆணித்தரமான அழுத்தம்

தமிழர்களை உள்ளடக்கிய ஆட்சியொன்றினூடாக அரசியல் யாப்பு சீர்திருத்ததின் மூலம் அரசியல் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தமிழ் மக்களின் நீண்ட கால விருப்பத்தை நான் நன்கு அறிவேன். எனது விருப்பமும் இதுவே. எமது மக்களின் இந்த விருப்பத்தினை கடந்த காலங்களில் சுதந்திர கட்சியின் ஆட்சியாளர்கள் பலரிடமும் நான் எடுத்துக்கூறி இருக்கிறேன். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் நான் ஜனாதிபதியுடன் ஏற்கனவே பேசியுள்ளேன். அவரும் மிகுந்த கரிசனை கொண்டிருக்கிறார். அவர்களின் விடுதலை தொடர்பில் நான் தொடர்ந்தும் ஜனாதிபதிக்கு என்னாலான காத்திரமான அழுத்தங்களை பிரயோகிப்பேன்.

யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவூகள் பலவருடங்களாக வீதியில் நின்று போராடுவதை பல தடவைகள் உன்னிப்பாக அவதானித்துள்ளேன்.அவர்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியமான நடவடிக்கைளை எடுப்பதற்கு நான் என்னால் முடிந்தளவுக்கு முயற்சிகளை மேற்கொள்வேன். விரைவில் அவர்களுக்கான தீர்வுகள் கிடைத்து இயல்பு வாழ்க்கைக்கு அவர்கள் விரைவில் திரும்ப வேண்டும் என்பதே எனது விருப்பம். மேலும் முப்படையினரினால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் அரச, தனியார் காணிகளை ஒரு பொறிமுறைக்கு அமைவாக விடுவித்து அம்மக்களை தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்துவேன்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கான பாதுகாப்பு, வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கடந்த காலங்களில் நான் முக்கிய கவனம் செலுத்தியிருக்கின்றேன். இலங்கையில் யு த்தம் முடிவடைந்து ஒரு தசாப்தம் முடிந்த நிலையிலும் முன்னாள் போராளிகள் பலர் வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதற்கும் நாளாந்த ஜீவனோபாயத்திற்கு சிரமப்படுவதையும் நான் நன்கறிவேன். அவர்களில் நிரந்தர வாழ்வாதாரமற்ற முன்னாள் போராளிகளை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக தகுதியான தொழில்வாய்ப்பு அல்லது சுய தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வழிசமைப்பேன்.

யுத்தத்தில் அங்கவீனமான முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள்,மாற்றுதிறனாளிகளின் விபரங்களை ஒன்று திரட்டி விசேட பொறிமுறையை உருவாக்குவதனூடாக அவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பேன்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • முன்னாள் போராளிகளில் விசேட தேவையுள்ளவர்களை இனங்காண ஏதுவான பொறிமுறையை உருவாக்குதல்

    முன்னாள் போராளிகள் பற்றிய விபரங்களை முழுமையாகத்திரட்டி கோர்வையாக்கி விசேட தேவையுள்ளவர்களை இனங்காண ஏதுவான பொறிமுறையை உருவாக்குதல்

    அரசியல் காரணத்திற்காக ஆயுதம் ஏந்திய, நலிவடைந்த அனைவரையும் இனம்காணப்பட்டு தரவுகள் திரட்டப்படும். இவர்களுக்கு உதவுவதற்கு நிதியம் ஒன்று உருவாக்கப்படும்.

  • தொழில் வாய்ப்பில்லாத, வாழ்வாதாரத்தை இழந்த முன்னாள் போராளிகளை தனியாக இனங்கண்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கல்

    விசேட தேவையுள்ள குறிப்பாக தொழில் வாய்ப்பில்லாத அல்லது வாழ்வாதாரத்தை இழந்த முன்னாள் போராளிகளை தனியாக இனங்கண்டு அவர்களுக்கு தொழிற்பயிற்சி அல்லது தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை வழங்க தனியான அலகினை ஏற்படுத்தல். தகுதியான நபர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் மற்றும் ஆர்வமுள்ளவர்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல்

  • முன்னாள் போராளிகளின் வாழ்வு விருத்திக்கான நிதியத்தை ஆரம்பித்தல்

    முன்னாள் போராளிகளின் வாழ்வு விருத்திக்கான நிதியத்தை ஆரம்பித்து அதனூடாக அவர்களின் குழந்தைகளின் கல்விக்கான ஊக்கத்தொகைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தல். குறிப்பாக புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழக அனுமதி பெறும் முன்னாள் போராளிகளின் பிள்ளைகளின் கல்விக்கு உதவித்தொகைகள் கிடைப்பதை உறுதிசெய்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல்.

    வடமாகணத்தில் பல தசாப்பத காலங்களாக இடம்பெற்ற சகல விதமான வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களினதும் துன்பங்களை நாம் உணர்ந்துள்ளோம். சகல தரப்பினராலும் காணமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒவ்வோறிற்கும் குறைந்த பட்சம் இரண்டு மில்லியன் (20 லட்சம்) ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பது எமது தீவிரமான கோரிக்கையாக அரசாங்கத்திடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதை நாம் நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றம் ஊடாக விஷேட நடவடிக்கை எடுப்போம்.

    காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சட்டரீதியான செயற்பாடுகளுக்கு தார்மீக ஆதரவு மற்றும் சட்ட உதவிகள் கிடைப்பதை உறுதிசெய்தல்.

  • யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளித்தல்

    யுத்தத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் குடும்பங்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை மற்றும் கல்வி, மருத்துவம், பொருளாதாரத்தில் விசேட கவனம்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • பெண் தலைமைத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்ய தொழிற்பயிற்சி மையங்களை உருவாக்கல்

    பெண் தலைமைத்துவக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை விருத்தி செய்ய வினைத்திறனுடன் கூடிய தொழிற்பயிற்சியினை வழங்குதல் மற்றும் அதற்கான தொழிற்பயிற்சி மையங்களை உருவாக்கி அதனூடாக பயிற்றப்படட ஆளணியை உருவாக்குதல்.

  • பெண்கள் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார தன்னிறைவு அடைதலை உறுதிப்படுத்தல்.

    பெண்கள் சுயதொழில் வாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார தன்னிறைவு அடைதலை உறுதிப்படுத்தல். குறிப்பாக சுயதொழில் தொடங்கும் பெண்களுக்கு மானிய விலையில் உற்பத்திப்பொருட்கள் மற்றும் இயந்திர உதவிகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

  • போரில் அவயவங்களை இழந்த மக்களின் விபரங்களை ஒன்றுதிரட்டும் விசேட பொறிமுறையை வகுத்தல்

    அங்கவீனமான முன்னாள் போராளிகள் மற்றும் போரில் அவயவங்களை இழந்த மக்களின் விபரங்களை ஒன்றுதிரட்டும் விசேட பொறிமுறையை வகுத்தல். அனைத்து இனங்காணப்பட்ட விசேடதேவையுள்ளவர்களுக்கும் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்தல்

    போரினால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினரும் இத்திட்ங்களுக்கு உள்வாங்கப்படுவார்.

  • மருத்துவ தேவையுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு பொது நிதியத்தை உருவாக்குதல்.

    போரில் விழுப்புண் அடைந்திருந்து தொடர்ச்சியான மருத்துவ தேவையுள்ளவர்களுக்கு உதவிகளை வழங்கும்பொருட்டு அனைத்து தரப்பினரையும் இணைத்து ஓர் பொது நிதியத்தை உருவாக்கி அதனூடாக உதவிகளை வழங்குதல்.

  • யுத்தத்தில் கால்களை இழந்தவர்களுக்கு விஷேட கவனிப்பு

    யுத்தத்தில் கால்களை இழந்து இன்னும் தனித்து இயங்கக்கூடிய முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பான கணனிப்பயிற்சிகளை வழங்கி தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குதல். மேலும் பொருத்தமான ஏனைய தொழில்பயிற்சிகளை வழங்கி சுயபொருளாதாரத்தை விருத்தி செய்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி