What are you looking for?

இயற்கை, பௌதீக, ஆளணி வளங்களை மேம்படுத்தல்

மனித அடிப்படைத் தேவைகளில் முக்கியமானவையான நிரந்தர வதிவிடம், சொந்தக் காணி இல்லாதிருப்பவர்களை இனங்கண்டு வீட்டுத்திட்டம் பெற்றுக் கொடுக்கப்படும். “நீரின்றி அமையாது உலகு” என்ற வாக்கிற்கிணங்க ‘அனைவருக்கும் குடிநீர்’ என்ற செயற்திட்டத்தினை உருவாக்கி குடிநீர் அற்ற கிராமங்களுக்கு குழாய் மூலம் நீரிணைப்புகளும் உருவாக்கப்படும். மேலும் ‘இருள் அகன்றிய தேசம்’ எனும் தொனிப்பொருளில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார வசதிகளை ஏற்படுத்தி தெருவுக்குத் தெரு வீதி விளக்குகள் ஒளிர்வதும் உறுதி செய்யப்படும்.

அபிவிருத்தி இடைவெளியை நிரப்பி நிறைவான கிராமங்களை உருவாக்கும் நோக்கில் குன்றும் குழியுமாகக் காணப்படும் வீதிகள் புனரமைக்கப்பட்டு நீண்ட, அகலமான, மேம்பாடான வீதி விஸ்தீரணத்துடன், அனைவருக்கும் சமமான பொதுப் போக்குவரத்து வசதிகள் கிடைக்க வழி சமைப்பேன். இதனூடாக கிராமத்திலிருந்து நகரம் வரையான உறவுகளின் தொடர்புகள் பலப்படுத்தப்படும். சனசமூக நிலைய வாசிகசாலைகக்கும், முன்பள்ளிகளுக்கும் புதிய உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பேன். கல்வியில் அனைவருக்கும் சமமான வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்காக அனைத்துப் பாடசாலைகளுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்துடனான சமமான வளப்பகிர்வுகள் எதிர்வரும் 5 வருட காலத்திற்குள் செயற்படுத்துவேன்.

இயற்கை வளங்களின் பயன்பாட்டினை நிலைத்திருக்கக் கூடிய வகையில் மேற்பார்வை செய்தல், திட்டமிடல் பயன்பாடு, சூழல் பாதுகாப்பு முதலான இயற்கை வள முகாமைத்துவத்திற்காக மாவட்ட மட்ட குழுக்களை அமைப்பேன். அதே வேளை மீள்புதுப்பிக்கத்க்க சக்தி வளத்தை மேம்படுத்தி மின்சாரம், எரிசக்தி, நீர்வழங்கலை சுற்றுச்சூழலுக்கு இசைவாக பேண்தகு முறையில் கிடைக்க உறுதி செய்வேன். மேலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன் உள்ளுர் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய சூழலியல் சுற்றுலாத்துறையினை அறிமுகம் செய்யவும் நடவடிக்கை எடுப்பேன்.

  • ‘’சொந்த வீடில்லாதோரை இனங்கண்டு புதிய வீடமைப்புத்திட்டங்கள்’’

    “அனைவருக்கும் வீடு“ “அனைவருக்கும் நிலம்“ என்ற அடிப்படையில் கிராமங்கள் தோறும் சொந்த வீடுகள் இல்லாதோர் மற்றும் சொந்த காணிகள் இல்லாதோரை இனங்கண்டு அவர்களுக்கு இவற்றை பெற்று கொள்ள புதிய பொறிமுறையொன்று உருவாக்கப்படும்.

    அரசாங்கத்தாலும் வெளிநாட்டு நிறுவனங்களினாலும் வழங்கப்படும் புதிய வீடமைப்புத்திட்டங்களை வடக்கிற்கு கொண்டு வருதல் இதன் மூலம் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டினை பெற்றுக்கொடுத்தல்.

  • கிராமங்களில் உள்ள ஒவ்வொரு தெருவுக்கும் தெருவிளக்குகள் பொருத்துதல்.

    “இருள் அகன்றிய தேசம்“ என்ற தொனிப்பொருளில் கிராமங்கள் தோறும் முறையான மின்சார வசதிகளை ஒவ்வொரு தெருவுக்கும் ஏற்படுத்தி தெருவிளக்குகள் வீதிகளில் ஒளிர்வதனை பயனாளர்களுக்கு உறுதிசெய்தல். அதன் மூலம் இரவுகளில் மக்கள் பயமின்றி உலாவ முடியும்.

  • ஒரு லட்சம் புதிய நீர்க்குழாய் இணைப்புகளை உருவாக்குதல்.

    “நீரின்றி அமையாது உலகு“ என்ற செயற்திட்டத்தின் மூலம் நன்னீர் அற்ற வீடுகளுக்காக கிராமங்கள் தோறும் குழாய் மூலம் தண்ணீர் பெறும் பெறும்பொருட்டு ஒரு லட்சம் புதிய நீர்க்குழாய் இணைப்புகளை உருவாக்குதல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • கிராமிய மட்டத்திலிருந்து நகரம் வரை வீதிகளையும் கால்வாய்களையும் சீரமைத்தல்.

    புதிய ஒரு லட்சம் கிலோமீட்டர் நீண்ட அகலமான மேம்பாடான வீதிகளை அமைத்து பொதுப்போக்குவரத்தினை கிராமிய மட்டத்திலிருந்து நகரம் வரை சீரமைத்தல். குறிப்பாக கிராமங்களிலுள்ள குன்றும் குழியுமான வீதிகளை புனரமைத்து அனைவருக்கும் சமமான போக்குவரத்து வசதிகள் கிடைக்கச்செய்தல் மற்றும் கழிவுநீர், மழைநீர் வழிந்தோடக்கூடிய வகையிலான புதிய வாய்கால்களை அமைத்து கொடுத்தல் பழைய கால்வாய்களை புனரமைத்து கொடுத்தல்.

  • சனசமூக நிலையங்களின் புனர்நிர்மாணம்

    கிராம மட்டங்களில் இயங்கி வரும் சமூகத்தின் முதலாவது கட்டமைப்பாக காணப்படும் சனசமூக நிலையங்களின் உள்கட்டுமான வேலைகளை பூரணப்படுத்தி கொடுத்தல். வாசிகசாலைகளில் காணப்படும் முன்பள்ளி மற்றும் நூலகங்களில் புதிய வசதிகளை ஏற்படுத்தி கொடுப்படும் மற்றும் கிராமத்தில் உள்ள சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்படும்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • இதுவரை பாரிய அபிவிருத்திகள் கிடைக்காத இடங்களுக்கும் அபிவிருத்தி

    நகரங்கள் கிராமங்கள் மற்றும் இதுவரை பாரிய அபிவிருத்திகள் கிடைக்காத இடங்கள் உட்பட அனைத்து இடங்களையும் உள்ளடக்கி பன்முகப்படுத்தப்பட்ட பாரிய அபிவிருத்தித்திட்டங்களை மேற்கொள்ளுதல். குறிப்பாக புதிய காரியாலயங்கள், சந்தைகள், கட்டிடங்கள், வீதிகள், பாலங்கள் உட்பட மனித வளங்களையும் தொழில்நுட்பப் பயன்பாட்டினையும் மேம்படுத்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி