What are you looking for?

மொழி, கலை, கலாச்சார, பண்பாட்டு, இலக்கிய புத்தாக்கம்

ஒரு சமூகத்தின் மொழி, கலை, கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு என்பவை மண்வாசனையோடு தொடர்புபட்டு அச்சமூகத்தின் அடையாளத்தைப் பிதிபலிப்பவை. எமது கிராமங்களில் பிரபல்யமாயிருந்து தற்போது மறைந்து போய்க் கொண்டிருக்கும் கலாச்சார பண்பாட்டு நிகழ்வுகள் மீள் எழுச்சியுற வழி வகுக்கப்பட்டு, நலிவடைந்த கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன், அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட பாடுபடுவேன். மொழியை உயிராய் மதிப்பவர்களே தமிழர்கள், அரச அலுவலகங்கள், நிர்வாகக் காரியாலயங்களில் தமிழ் மொழியின் இருப்பை 100% உறுதிப்படுத்துவேன். குறிப்பாக யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் மொழிக்கு முதலிடம் ஒதுக்கப்படும். ஆரம்பக் கல்வியிலிருந்தே மாணவர்களுக்கு மொழி வளர்ச்சியை ஏற்படுத்த அனைத்துப் பாடசாலைகளிலும்; தமிழ், ஆங்கில ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வேன். முன்னாள், இந்நாள் தமிழ், இலக்கியவாதிகளின் ஆவணங்கள் கோவையாக்கப்படும். தமிழ் கலாச்சார தொல்பொருள் வரலாற்று ஆவணங்கள், சின்னங்கள் பாதுகாக்கப்படுவதுடன் தொன்மையான ஆலயங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருப்பேன்.

மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக்கூடாது என்று வாழ்வியலைக் கற்றுக் கொடுத்தது தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள். இவ்வாறிருக்க வன்முறைகளைத் தூண்டி மக்களின் அமைதியான வாழ்வை சீர் குலைக்கும் நடவடிக்கைகள் தற்காலத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அனைத்து வன்முறையாளர்களையும், குழுக்களையும் யாழ் மண்ணிலிருந்து அடியோடு இல்லொதொழிக்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு பொது மக்களின் ஸ்திரமான வாழ்வினை உறுதி செய்ய போராடுவேன். போதைப்பொருட்கள்; யாழ் குடா நாட்டுக்குள் கொண்டு வரப்படும் வழிவகைகளை கண்டறிந்து அதனைத் தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அதிகரித்து வரும் குடும்ப வன்முறைகள், பெண்கள், சிறுவர் துஸ்பிரயோகங்களைத் தடுப்பதற்காகக் கிராமிய மட்ட ரீதியில் சிறப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டு பொருத்தமான ஆலோசனைகள் வழங்கப்படுவதனூடாக ஏற்பட இருக்கும் சமூக சீர்கேடுகளை தடுக்க முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பேன்.

பாரம்பரியமாகக் கலைகள் பயிலப்பட்டு வந்த பல கிராமங்கள் சமகாலத்தில் பயில்வு முற்றாக வழக்கொழிந்த நிலையும், சில கிராமங்களில் அருகலாக இடம்பெறுவதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. பாரம்பரியக் கலைகளைப் பேணவும், அதன் தொடர் செயற்பாடுகளுக்கு வழி வகுக்கவும், மீளுருவாக்கச் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமாகும். நலிவடைந்த கலைஞர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துவதனுாடாகவும் இக்கலைகள் வாழ்வதற்குப் பொருத்தமான சமூகத்தைக் கட்டி எழுப்புவதனுாடாகவும் நீடித்து நிலைக்க வைத்தல்

 • அழிந்துபோன கலைசார்ந்த நிகழ்வுகளின் மீளுருவாக்கம்

  கிராமங்களில் பிரபல்யமாயிருந்து இன்று வழக்கொழிந்து போயுள்ள கலை சார்ந்த நிகழ்வுகளை அடையாளம் கண்டு மீளுருவாக்க ஆவண செய்தல். உதாரணமாக காத்தவராயன் கூத்து மற்றும் அரிச்சந்திர மயான காண்டம் போன்ற கூத்துக்கலைகள் மறைந்து போன காரணங்களைக் கண்டறிந்து, மீள எழுச்சியுறச்செய்தல்.

 • நலிவடைந்த கலைஞர்களது வாழ்வாதாரத்தை உயர்த்துதல்

  நலிவடைந்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தலும், அவர்களின் நீண்ட ,நெடிய வாழ்வுக்கான காப்பீடு மற்றும் நிதியம் தொடர்பில் திட்டம் வகுத்தலும்.

  வழக்கொழிந்த கூத்துக்கலைகளை ஆலயங்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளில் மீண்டும் அறிமுகப்படுத்துதல். கலைகளினூடான வருமானத்தைப் பெருக்க வழிவகைகள் மேற்கொள்ளல்.

  யாழ் மணம் வீசும் தமிழர்களின் பாரம்பரியக் கலைகளின் வித்துவான்களை அடையாளம் கண்டு கௌரவப்படுத்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

யாழ் குடாநாட்டிலும், கிளிநொச்சி மாவட்டத்திலும் தாய் மொழி தமிழ் மொழியினை முதல்நிலைப்படுத்தும் செயற்திட்டங்களை உடன் நடைமுறைக்குக் கொண்டு வருதல். மாணவப் பருவத்திலிருந்தே சிறுவர்களிடத்தே மொழி வளர்ச்சியை ஏற்படுத்தும் செயற்திட்டங்களை ஆரம்பித்தல். தமிழ் மொழியின் இலக்கிய, இலக்கண நயங்களை அனைவருக்கும் தெளிவுபடுத்தல்.

 • தமிழ் பிரதேசங்களின் நிர்வாக அலகுகளில் தமிழ் மொழிக்கு முதலிடம்

  அரச காரியாலயங்கள் மற்றும் நிர்வாக அலகுகளில் தமிழ் மொழியின் இருப்பினை 100% உறுதிப்படுத்துதல். குறிப்பாக யாழ், கிளிநொச்சி மாவட்டங்களின் பெயர்ப்பலகைகளில் தமிழ் மொழிக்கான முதலிடத்தை உறுதிப்படுத்துதல்.

 • யாழ் பேச்சு வழக்கு மற்றும் உரித்தான சொற்களின் பாதுகாப்பு தொடர்பில் மேலதிக செயற்திட்டங்கள்

  தமிழ்மொழியின் செம்மையினை விருத்தி செய்ய இலக்கியவாதிகளுடன் சேர்ந்து பயணித்தல். அவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய புதிய வேலைத்திட்டங்களை உருவாக்குதல். குறிப்பாக யாழ் பேச்சு வழக்கு மற்றும் உரித்தான சொற்களின் பாதுகாப்பு தொடர்பில் மேலதிக செயற்திட்டங்களை உருவாக்குதல்.

 • இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழிக் கற்கைகளுக்கான ஏற்பாடு

  வேலைவாய்ப்புக்களையும், பொருளாதார மேம்பாட்டினையும் அதிகரிக்கும் பொருட்டு ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளை விருப்பமுள்ளவர்களுக்குக் கற்றுத்தர விசேட ஏற்பாடுகளை மேற்கொள்ளல். குறித்த மொழிகளை விரைவாகவும், குறைந்த செலவில் அல்லது இலவசமாகப் பயிற்றுவிக்க ஆளணி வசதிகளை ஏற்படுத்தல்.

 • மொழிவளர்ச்சியை மேம்படுத்த அதீத கவனம் செலுத்துதல்

  பாடசாலைகளில் மொழிவளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு மேம்பட்ட திட்டங்களை உருவாக்குதல். குறிப்பாக அனைத்துப் பாடசாலைகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிக்கான ஆசிரியர்கள் இருப்பதை உறுதிப்படுத்துதல். ஆங்கில மொழிவளர்ச்சியில் பின்தங்கிய பாடசாலைகளில் விசேட கவனத்தினைச் செலுத்துதல் மற்றும் மேலதிக ஆங்கில வகுப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல்.

  பொலிஸ் நிலையங்கள், முப்படைகள் மற்றும் அனைத்து அரச நிறுவனங்களிலும் தொடர்பாடல் மொழியாக தமிழ் மொழி இருப்பது நூறு வீதம் உறுதிப்படுத்தப்படும்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

ஒழுக்காற்று விழுமியங்கள் ஊடாக ஆண், பெண் சமத்துவத்தை மேம்டுத்தி சமூகத்தில் மாற்றங்களை எழுப்புவதனுடாக வன்முறையற்ற சமுதாயத்தைக் கட்டி எழுப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ளல். வன்முறையாளர்களாக மாற்றப்படும் எம்மவர்களைப் பாதுகாப்பதற்கான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தல். குடும்ப வன்முறைகள், துஸ்பிரயோகங்களைத் தவிர்ப்பதற்கான வழிகாட்டல்களை மேற்கொள்ளல்.

 • வன்முறை சார்ந்த குழுக்களை இனம் கண்டு வன்முறையற்ற பிரதேசமாக மாற்றல்

  ஆவாக்குழு உட்பட வன்முறையைத் தூண்டி மக்களின் அமைதியான வாழ்வைச் சீர்குலைக்கும் அனைத்து வன்முறையாளர்களையும் யாழ், கிளிநொச்சி மண்ணிலிருந்து அடியோடொழிக்கும் வகையில் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

 • குடும்ப வன்முறைகள், துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

  அதிகரித்துவரும் குடும்ப வன்முறைகள், சிறுவயது கர்ப்பம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் வகையில் தீவிர வேலைத்திட்டங்களைத் தயாரித்து பொருத்தமான ஆலோசனைகளை வழங்குதல். கிராமங்கள் மற்றும் நகரங்கள் தோறும் குழுக்களை அமைத்துத் தனிப்பட்ட ஆலோசனைகளை வழங்கி சமூகச் சீர்கேடுகளை முற்கூட்டியே தடுத்தல்

 • வன்முறைக்கு எதிரான சிந்தனைகளை இளைஞர்களிடையே ஏற்படுத்தல்

  குழுமோதல்கள் மற்றும் வன்முறையாளர்களுக்கு எதிரான சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வினை இளையோருக்கு ஏற்படுத்தி எதிர்காலம் குறித்த சிந்தனையைத் தோற்றுவித்தல். பாடசாலை மட்டத்திலிருந்தே வன்முறைக்கு எதிரான சிந்தனையைக் கட்டியெழுப்புதல்

 • வன்முறைகள் தோற்றுவிக்கப்படும் காரணிகளை அடையாளங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்தல்

  வன்முறையாளர்கள் அடையாளம் காணப்படும் பகுதிகளை விசேடமாக இனங்கண்டு காரணிகளை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்தல்

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

யாழ் மண்ணில் போதைப்பொருள் பாவனையின் காரணமாக பலரின் வாழ்வு இருளாகிக் கொண்டு செல்வதுடன் தொழில் முறிவு, கல்வி இழப்பு என்பனவும் தோற்றம் பெறுகின்றது. போதைப்பொருட்கள் எமது பிரதேசங்களுக்குள் கொண்டு வரப்படும் வழிகளை ஆராய்ந்து தடை செய்ய நடவடிக்கை எடுப்பதுடன் போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்குத் தகுந்த தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வழி வகுத்தல். போதையொழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளைக் கிராம ரீ தியாக மேற்கொள்ளல்.

 • போதை பொருள் முகவர்கள், வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களை இல்லாதொழித்தல்

  போதைபொருள் முகவர்கள், வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களையும், கஞ்சா மற்றும் ஹேரோயின், ஐஸ் போன்ற ஆபத்தான போதைப்பொருட்களின் பாவனையையும் முற்றாக யாழ், கிளிநொச்சி மண்ணிலிருந்து விட்டொழித்தல். இந்தப் போதைப் பொருள் முகவர்கள், வியாபாரிகள் மற்றும் விநியோகஸ்தர்களைச் சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த நடவடிக்கைள் எடுப்பதை உறுதிப்படுத்தல்.

  யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள சகல பாடசாலைகளிலும் போதைப்பொருட்கள் தொடர்பான விழிப்புணர்வுப் பிரச்சாரம் கட்டாயமாக்கப்படும். இது தொடர்பான விஷேட சட்ட மூலம் ஒன்றைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல். முக்கியமாகப் பெற்றோருக்கு விஷேடமான போதையொழிப்பு விழிப்புணர்வுப் பயிற்சிப் பட்டறைகளை கிராமங்கள் தோறும் சனசமூக நிலையங்கள் ஊடாக நடத்தல். இது அனைத்துக் கிராமங்களிலும் கட்டாயமாக்கப்படும்.

 • போதைப்பொருள் கடல் மார்க்கமாக வருவதைத் தடுக்க வேண்டிய எற்பாடுகளை முன்மொழிதல்.

  போதைப்பொருட்கள் யாழ் குடா நாட்டிற்குள் வரும் மார்க்கங்களைக் கண்டறிந்து, மத்திய அரசாங்கத்துடன் இணைந்து அதனைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல். குறிப்பாகக் கேரளக் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக வருவதைத் தடுக்க வேண்டிய எற்பாடுகளை முன்மொழிதல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

துரதிஷ்டவசமாக இலங்கை தமிழர் இலக்கிய வரலாற்றில் ஏற்பட்ட இடைவெளியை நிவர்த்தி செய்து எமது தனித்துவமான இலக்கிய படைப்புக்களை ஆவணப்படுத்துதலின் அவசியத்தை நன்கறிந்தவன் நான். எமது கடந்த கால இலக்கிய படைப்புக்களை பொக்கிஷமாக பேணிப் பாதுகாக்கவும், எம்மவர்களின் எதிர்கால இலக்கிய படைப்புக்களை உலக அரங்கில் மிளிரச் செய்வதற்கும் என்னாலான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

 • அழியாத தமிழர் வரலாறு சார்ந்த எச்சங்களை மின்னூல்களாக்குதல்

  70 வருடகால தமிழ், அரசியல் மற்றும் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள் மற்றும் இதர காலத்தால் அழியாத தமிழர் வரலாறு சார்ந்த எச்சங்களை மின்னூல்களாக்கி, ஓரிடத்தில் சேமித்து வரலாற்றுக் கடமையை உறுதிப்படுத்தல்.

 • யாழ் இலக்கியவாதிகளின் வெளியீடுகள் மற்றும் புத்தகத் தொகுப்புகளை வெளீயீடு செய்தல்

  முன்னாள் மற்றும் இந்நாள் யாழ் இலக்கியவாதிகளின் வெளியீடுகள் மற்றும் புத்தகத் தொகுப்புகளைக் கோர்வையாக்கி அவற்றின் இருப்பினை உறுதிப்படுத்துவதற்காக ஒரு அமைப்பினை நிறுவுதல். அந்த அமைப்பின் நிர்வாகிகளாக இலக்கியவாதிகளை நியமித்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

தொல்லியல் முக்கியத்துவம் வாய்நத இடங்களில் முறையான அகழாய்வு உள்ளிட்ட பணிகளை செயற்படுத்தல். தமிழர் வரலாற்றுச்சின்னங்களைப் பாதுகாக்கும் ,பராமரிக்கும் செயற்பாடுகளைத் திட்டமிடல். அருங்காட்சியகங்களிலுள்ள கலைப்பொருட்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.வரலாற்றுச் சின்னங்களை நகலெடுத்தல் அச்சிடுதல் நுாலாக்குதல் போன்ற செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதனுாடாக தமிழர் கலாச்சார வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல்.

 • யாழில் உள்ள புராதன ஆதாரங்களைத் திரட்ட அகழ்வாராய்ச்சிக் குழுக்களை நியமித்தல்

  தமிழர்களின் பாரம்பரிய வாழ்விடமான யாழில் அதற்கான மேலதிக புராதன ஆதாரங்களைத் திரட்ட அகழ்வாராய்ச்சிக் குழுக்களை நியமித்துத் தமிழர்களின் இருப்பினை நிலைநிறுத்தல். அகழாய்வு மூலம் மேலதிக வரலாற்றுச் சின்னங்களை வெளிப்படுத்தல்.

 • வரலாற்று ஆதாரங்களைப் பாதுகாத்தல்

  ஏற்கனவே கண்டுபிடித்த தமிழர் வாழ்விட உரிமைக்கான ஆதாரங்களைப் பாதுகாத்து, மேலதிக ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தல். அத்துடன் தமிழர் கலாச்சார வெளிப்பாட்டுப் பகுதிகளைப் பிரசித்தமாக்கி யாழ்ப்பாணம் தமிழர்களின் பாரம்பரியம் மிக்க பூர்வீக இடம் என்பதனை அறிவித்தல்.

 • யாழ், கிளிநொச்சி மக்களின் மத ஒற்றுமையினைப் பாதுகாத்தல்.

  யாழின் தொன்மையான ஆலயங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாயிருத்தல் மற்றும் யாழ், கிளிநொச்சி மக்களின் மத ஒற்றுமையினைப் பாதுகாத்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி