What are you looking for?

உடல், உள நலன்மிக்க ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கல்

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற கூற்றிற்கமைய அதிகரித்து வரும் உடல் சார் நோய்களைக் கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் பொது உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள், அமைப்பதனூடாக உடற்பயிற்சியினை ஊக்குவிப்பேன். இலங்கையில் ஏனைய இடங்களுடன் ஒப்பிடுகையில் யாழ், கிளிநொச்சி மாவட்டப் பெண்கள் உடற்பயிற்சி சார் செயற்பாடுகளில் ஈடுபடுவது குறைவாகவே காணப்படுகிறது. ஆகவே பெண்களுக்காக தனியான உடற்பயிற்சி நிலையங்களை அமைக்க வழிகோலுவேன்.

டெங்கு ஒழிப்புச் செயற்திட்டங்களைப் பன்முகப்படுத்தி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் டெங்கு நோயை இல்லாதொழித்து இலங்கையில் முன்மாதிரியான மாவட்டங்களாகத் திகழ வழிகோலுவேன். கொரோனா போன்ற வைரசுகள் பரவலைத் தடுப்பதற்காக யாழ், கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவையினருடன் இணைந்து செயற்படுவேன். கோவிட் 19 தாக்கத்தின் பின்னர் தற்சார்பு பொருளாதாரம், கிராமிய பொருளாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தும் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. இதனை அடையும் பொருட்டு உரிய விழிப்புணர்வு, பயிற்சிகள், இலகு கடன் வசதிகள், உர மானிய சலுகைகள் ஆகியவற்றை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன்.

இயற்கை விவசாயச் செய்கையினை ஊக்குவிப்பதற்காக இயற்கை கிருமிநாசினிகள், சேதன பசளைகளை இலகுவாகவாகவும் மானிய அடிப்படையிலும் கிடைப்பது உறுதிப்படுத்தப்படும். அரச மருத்துவமனைகள் அனைத்தும் போதிய நவீன வசதிகளுடன் செயற்படுவது உறுதிப்படுத்தப்படுவதுடன் மக்களுக்கு இலவச மருத்துவ சேவைகள் செவ்வனே சென்றடைவது உறுதி செய்யப்படும். வைத்தியர், தாதியர் பற்றாக்குறை காணப்படும் வைத்தியசாலைகளை இனங்கண்டு பொருத்தமான நியமனங்கள் துரிதமாக மேற்கொள்ளப்படுவதனூடாக சர்க்கரை வியாதி, குழந்தைப்பேறின்மை, புற்றுநோய் போன்ற முக்கிய மருத்துவத் தேவைகளுக்கான சிகிச்சை வசதிகளை யாழ் ,இகிளிநொச்சி மாவட்டங்களிலேயே பெற்றுக்கொள்ள வழிவகை செய்வேன். கேரள மாநிலத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் தனித்துவமான சித்த ஆயூர்வேத வைத்தியத் துறையை விரிவாக்குவேன்.

  • உடற்பயிற்சி செய்யக்கூடிய சூழல் உருவாக்குதல்

    அதிகரித்து வரும் உடற்பருமன் தொடர்பான நோய்களைக்கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் புதிய பொது உடற்பயிற்சி நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் பிரத்தியேகமான இடங்களை அமைத்து உடற்பயிற்சியினை ஊக்குவித்தல் மற்றும் பயற்சியளித்தல், உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்களை உருவாக்குதல்.

  • மகளிர்களுக்கான உடற்பயிற்சி நிலையங்கள் தனியாக உருவாக்கல்

    இலங்கையின் ஏனைய இடங்களுடன் ஒப்பிடும் போது யாழில் குடும்பப்பெண்களின் உடற்பயிற்சி சார்ந்த செயற்பாடுகள் குறைந்த நிலையிலிருப்பது நீண்டகாலமாக சிலாகிக்கப்படும் ஒரு விடயம். எனவே பெண்களுக்கென தனியான சிறப்பான உடற்பயிற்சி மையங்களை அமைத்து பயிற்சிகளை இலவசமாக அளித்து குடும்பப்பெண்களின் உடற்பருமன் பிரச்சனைக்கு தீர்வினை வழங்குதல்.

  • உணவகங்களுக்கான சுகாதார பாதுகாப்பை உறுதிசெய்தல்

    யாழ், கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் முறையான சுகாதார முன்னேற்பாடுகள் மற்றும் பொருத்தமான கழிவகற்றல் முகாமைத்துவத்தை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்தப்படும்.

  • எம் பிரதேசத்தை டெங்கு நோயற்ற பிரதேசமாக பிரகடனப்படுத்தல்

    டெங்கு நோயொழிப்பு செயற்பாடுகளின் வினைத்திறனை மேலும் அதிகரித்து இலங்கையில் டெங்கு நோயற்ற மாவட்டமாக யாழ்,கிளிநொச்சி மாவட்டத்தை அறிவித்து எம்பிரதேசங்களை இலங்கையின் முன்மாதிரியாக திகழ வைத்தல்.. கொரோனா போன்ற வைரஸ்கள் பரவலை தடுக்க தேவையான முன்னேற்படான இறுக்கமான நடவடிக்கைகள் தொடர்பில் யாழ் மாவட்ட சுகாதார சேவையினருடன் நெருக்கமாக இணைந்து செயற்படல் வழிகோலுவேன்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • கிராமங்கள் முதல் நகரம் வரை தூய்மையாக்கல்

    "சுத்தமான யாழ்” திட்டத்தை முறையாக நடை முறைப்படுத்தி நகரத்திலிருந்து கிராமங்கள் வரை மக்கள்மயப்படுத்தப்பட்ட தூய்மையாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தல். அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பினை பெற்று சிரமதானப்பணிகளை மேற்கொண்டு யாழ், கிளிநொச்சி மாவட்டத்தை ஏனைய மாவட்டங்களுக்கு முன் மாதிரியாக்கப்படும்.

  • மீள்சுழற்சி கழிவகற்றல் பற்றிய புதிய நுட்பங்களை அறிமுகப்படுத்தல்

    சுத்தம், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பில் மக்களை தெளிவடைய வைத்து “சுத்தமான யாழ்” திட்டம் வெற்றிகரமாக செயற்படுவதை தொடர்ச்சியாக உறுதிப்படுத்தல். குறிப்பாக மீள்சுழற்சி (Reduce, Reuse, Recycle) கழிவகற்றல் பற்றிய நுட்பங்களை அறிமுகப்படுத்தி தொடர்ந்து மாநகர,நகர,பிரதேச மற்றும் கிராமிய மட்டங்களில் தொடர்ச்சியான காத்திரமான பங்களிப்பினை வழங்குதல். உள்ளூராட்சிஅமைப்புக்களுக்கான கழிவகற்றல் உபகரணங்கள் வழங்கல்.

  • கழிவு முகாமை தொடர்பான நுட்பங்களை புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் யாழில் நிர்மாணித்தல்.

    நீண்டகாலம் நிலைத்து சமூகத்திற்கு நன்மை பயக்கும் கழிவு முகாமை தொடர்பான நுட்பங்களை புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் யாழில் நிர்மாணித்தல். அது தொடர்பில் அனைத்து தரப்பினரையும் இணைத்து பயணித்தல். இதன் மூலம் விவசாயத்தில் சேதன பசளைகள் உருவாக்கி விவசாயிகளுக்கு மானிய மற்றும் இலவசமாக வழங்கல்.

  • “நீரின்றி அமையாது உலகு” திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

    சுத்தமான குடிதண்ணீர் பிரச்சனையுள்ள இடங்களை இனங்கண்டு அனைத்து மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் தடையின்றி கிடைப்பதனை உறுதிசெய்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • நஞ்சில்லா இரசாயனமில்லா இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவித்தல்.

    நஞ்சில்லா இரசாயனமில்லா இயற்கை முறையிலான விவசாயத்தை ஊக்குவித்தல். இயற்கை கிருமிநாசினிகள் பசளைகள் இலகுவாக மானிய விலையில் கிடைப்பதனை உறுதிப்படுத்துதல். இயற்கையாக விளைந்த பொருட்களுக்கு விசேட சந்தை வசதிகளையும் மக்களுக்கு இரசாயனமில்லா உணவு கிடைப்பதனையும் முடிந்தவரை உறுதிப்படுத்தல். “உணவே மருந்து” என்ற கருத்தை உண்மையாக்கல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • சித்தவைத்திய பணிமனைகள் மற்றும் பயிற்றப்பட்ட விசேட ஆளணியை உருவாக்குதல்.

    கேரளா போன்ற மாநிலங்களின் முன்மாதிரிகளை பின்பற்றி யாழ் தனித்துவமான சித்த ஆயுர்வேத வைத்திய முறைகளை உலகளாவிய ரீதியில் எடுத்துச்செல்லுதல். சித்த வைத்தியத்தை மேம்படுத்த விசேட பொறிமுறைகளை உருவாக்கி அதிக சித்தவைத்திய பணிமனைகள் மற்றும் பயிற்றப்பட்ட விசேட ஆளணியை உருவாக்குதல். சித்த மருத்துவத்துக்கான மருத்துவர்களை உருவாக்குதல்.

  • இயற்கை மற்றும் ஆயுர்வேத முறையிலான வைத்திய முறைகளை பிரபல்யமடையச்செய்தல்

    யாழ் சித்த வைத்திய பீடத்துடன் இணைந்து வேலைத்திட்டங்களை முன்னெடுத்து மருத்துவ சுற்றுலா பயணிகளை யாழ் நோக்கி கவர்ந்திழுத்தல். குறிப்பாக உலகளாவிய ரீதியில் பிரபலமடைந்து வருகின்ற இயற்கை மற்றும் ஆயுர்வேத முறையிலான வைத்தியமுறைகளை பிரபல்யமடையச்செய்து யாழ் மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுதல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

  • கிராமங்கள் தோறும் இருக்கும் அரசாங்க இலவச மருத்துவமனைகள் நிறுவல்

    "கிராமங்கள் தோறும் இருக்கும் அரசாங்க இலவச மருத்துவமனைகள் போதிய வசதிகளுடன் செயற்படுவதை உறுதிப்படுத்தல். அரசு வழங்கும் இலவச மருத்துவ சேவைகள் ஏழை மக்களை செவ்வனே சென்றடைவதை உறுதிப்படுத்தல். வைத்தியர் பற்றாக்குறையிருக்கும் வைத்தியசாலைகளை இனங்கண்டு பொருத்தமான நியமனங்களை மேற்கொள்ளுதல். வைத்தியசாலை செல்ல முடியாமல் இருக்கும் வயோதிபர்கள் இல்லங்களுக்கு வைத்தியர்கள் சென்று வைத்தியம் பார்க்கும் சூழலை உருவாக்கல்.

  • யாழ் மாவட்டதில்லுள்ள போதனா வைத்தியசாலைகள் அனைத்தும் போதிய வசதிகளுடன் இயங்குவதை உறுதிப்படுத்தல்

    யாழ் மாவட்டதில்லுள்ள போதனா வைத்தியசாலைகள் அனைத்தும் போதிய நவீன வசதிகளுடன் இயங்குவதை உறுதிப்படுத்தல். வைத்திய உபகரணங்கள் மற்றும் நிபுணர்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்தல். வைத்திய தேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்லும் நோயாளிகளின் செலவை குறைப்பதும் அவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்பதுமாக இவ் திட்டம் அமையும்.

  • சக்கரை வியாதி, குழந்தை பேறின்மை, புற்றுநோய் போன்ற முக்கிய மருத்துவத்தேவைகளை யாழ்ப்பாணத்திலேயே நிறைவேற்ற ஆவணை செய்தல்.

    புலம்பெயர்ந்து வாழும் மருத்துவர்கள் மற்றும் இந்திய தமிழ்நாட்டின் சிறப்பு மருத்துவமனைகளின் ஆலோசனைகளை பெற்று ஆரம்பிக்கப்பட்ட சக்கரை வியாதி, குழந்தை பேறின்மை, புற்றுநோய் போன்ற முக்கிய மருத்துவத்தேவைகளை யாழ்ப்பாணத்திலே நிறைவேற்ற ஆவணை செய்தல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி