What are you looking for?

அனைத்து தமிழ் உறவுகளையும் ஒரே புள்ளியில் இணைத்தல்

இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியான இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி தனிச் சிறப்பம்சங்களைக் கொண்ட தனித் தாரகையாகத் திகழ்கின்றது. கலைக்குப் புகழ் பெற்ற தமிழன், அதற்குப் புகழ் கொடுத்த மண் இந்த மண், உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ் மக்களை இம் மண்ணுடன் ஒன்றிணைக்கும் விசேட திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துவேன். குறிப்பாகப் புலம்பெயர் உறவுகளையூம், தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களையும் தாயகத்துடன் இணைக்கும் இணைப்புப்பாலத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கூடாக செயல் வடிவம் பெறச்செய்வேன். எம் மக்களுக்குப் பல வழிகளிலும் துணையாய் இருக்கின்ற உலகத் தமிழ் உறவுகள், புலம்பெயர் தமிழர்களின் மக்கள் நலன் சார் சமூக பொருளாதார ஆதரவுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர ஏதுவான நடைமுறைகளை மேற்கொள்வதனூடாக உதவித்திட்டங்களை பொருத்தமானவர்களுக்கு சென்றடைய வழிசமைப்பேன். எம் மண்ணிலிருந்து உயர்படிப்பு, தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் உறவுகளுக்கு மேற்படி இணைப்பினூடாக உதவிகள் கிடைக்க வழிவகைகளை உருவாக்குவேன். புலம்பெயர் தொழில்தருநர்களையும், ஆர்வமான இளையோர்களையும் இணைத்து தொழில் வாய்ப்புக்களை தமிழ் இளைஞர்களுக்கு எம் மண்ணிலே கிடைப்பதை உறுதி செய்வேன்.

வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்காக ஒரு தளத்தினை உருவாக்கி அவர்களின் அறிவு, உலகளாவிய அனுபவங்களைப் பகிர வழிவகுப்பேன். பல்வேறுபட்ட மொழிகளைப் பேச்சு மொழியாகக் கொண்ட நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் தாய் மொழிப் பற்றை உறுதி செய்யும் வகையில் இணையத்தினூடாக தமிழ்மொழிக் கற்கை நெறிகள் ஆரம்பிப்பேன். உலகத் தமிழர்கள் தமது பூர்வீக இடங்களைப் பற்றியும் எம் மண்ணின் கலாச்சாரச் சிறப்புப் பற்றியும் அறியக்கூடியவாறு விவரங்களைத் திரட்டி இணையத்தில் கிரமமான முறையில் பதிவேற்றுவேன். எம் மண் பெற்றெடுத்த சிறப்பை அழிப்பதோ சிதைப்பதோ என்பது நடவாத காரியம் என்பது எனது திடமான நம்பிக்கை.

உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழர்களின் இணைவு காலத்தின் கட்டாய தேவை மட்டுமன்றி இலங்கையில் குறிப்பாக வடபகுதியில் நீடித்த காத்திரமான இருப்புக்கு இன்றியமையாத ஒன்றாகும். யுத்தத்தினால் வாழ்வியலின் போக்கு மாறி மீண்டும் தன் ஸ்திரத்தன்மையை நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கும் வடபகுதி தமிழ்மக்களை உலகம் முழுதும் வாழும் தமிழர்கள் கைகொடுத்து தூக்கி விடுவது தமிழ் இனத்தின் தலையாய கடமையாகும். இந்த இணைப்புப்பாலம் நிச்சயமாய் தமிழர்களை தன்னிகரற்ற இனமாய் இலங்கையில் தலைநிமிர்ந்து வாழவைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

 • முழுவுலகத்தழிழர்களையும் ஒன்றிணைத்தல்

  உலகம் முழுதும் வாழும் தமிழர்களை யாழ் மண்ணோடு இணைக்கும் விசேட செயற்திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தல். குறிப்பாக நவீன தொழில்நுட்ப வசதிகளைக்கொண்டு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை யாழ் மண்ணோட இணைக்கும் இணைப்புப்பாலத்தை அறிமுகப்படுத்தல்.

 • யாழ் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஆதரவை ஒரு குடையின் கீழ் கொண்டுவருதல்

  யாழ் மக்களின் கல்வி,மருத்துவ,பொருளாதார மற்றும் சமூக விருத்திக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஏகோபித்த பங்களிப்பினை ஒரு குடையின் கீழ் கொண்டுவர ஏதுவான நடைமுறைகள் குறித்து ஆராய்ந்து மிகவும் நெருக்கமாக செயல்படும் சூழ்நிலையினை ஏற்படுத்தல்.

 • இந்திய தமிழர்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தல்

  தொன்றுதொட்டு இலங்கை தமிழர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழ்நாட்டு மக்களுடன் நேரடித்தொடர்பினை ஏற்படுத்தி எம்மக்களின் பொருளாதார விருத்திக்கு ஒத்துழைப்பினை பெற்றுக்கொடுத்தல். மேலதிகமாக கலை மற்றும் கலாச்சார பயிற்சிகளை வழங்க ஏற்பாடுகளை செய்துகொடுத்தல்

 • உலகத்தமிழர்காளல் யாழ் மண்ணிற்கு கிடைக்கும் உதவி திட்டங்களுக்கு தடைகளை அகற்றல்

  உலகத்தமிழர்கள் யாழ் மண்ணில் மேற்கொள்ளும் மக்கள் நலன்சார் பொருளாதார மற்றும் சமூக திட்டங்களுக்கு ஒத்துழைத்து தடைகளை அகற்றி வெற்றிகரமான செயற்பாடுகளுக்காக பாடுபடல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

ஒரு காலத்தில் இலங்கையின் கல்வியினை கட்டியாண்டு ஏனைய இனங்களுக்கும் கல்வி சொல்லித்தந்த தமிழினம் இன்று இலங்கையின் கல்விநிலையில் கடை நிலையில் புரள்கிறது. குறிப்பாக நூற்றுக்கணக்கான பொறியியலார்கள் மற்றும் மருத்துவர்களை தவணை மாறாமல் பிரசவித்த யாழ்ப்பாணம் இன்று தென்பகுதியுடன் போட்டியிடுவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. ஒவ்வொரு வருடமும் வெளியாகும் சாதாரணதர, உயர்தர பெறுபேறுகள் எமது சரிவினையும் வீழ்ச்சியினையும் கட்டியமிட்டு பதிவு செய்கின்றன. நீண்ட கொடிய யுத்தத்தால் அநேகமான புத்திஜீவிகள் நாட்டினை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் தமது துறைகளில் கோலோச்சும் அதே நேரத்தில் அவர்களின் காத்திரமிக்க பங்களிப்பு எமது பிரதேசங்களின் கல்விவளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும். இந்த அறிவுப்பாலம் ஊடாக உலகம் முழுதும் வாழும் கல்வியாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் ஒன்றிணைந்து யாழ்மண்ணை மீண்டும் கல்வியில் மிளிரவைப்பதே இலக்காகும்.

 • உலகத்தமிழர்கள் அனுபவங்களை பகிர ஒரு தளம் அமைத்தல்

  உலகம் முழுவதும் அறிவு நாற்றுகளாகப் பிடுங்கி நாட்பட்ட தமிழர்களை தமது அறிவு மற்றும் உலகளாவிய அனுபவங்களை பகிர ஒரு தளத்தினை உருவாக்கி அறிவினையும் அனுபவங்களையும் பகிர பாலமமைத்தல்.

 • தமிழ் மொழி கற்கையினை இணையம் ஊடகா மேற்கொள்ள வழிகோலுதல்

  வெவ்வேறு மொழிகளை பேசும் நாடுகளில் வாழும் தமிழ்மக்களின் தமிழ்மொழி மீதான பற்றினை உறுதிப்படுத்தும் வகையில் இணையம் ஊடாக தமிழ்மொழி கற்கைநெறிகளை ஆரம்பித்து நடைமுறைப்படுத்தல்.

 • தமிழர்களது கலாச்சார சிறப்பை பற்றி தொகுத்து இணைத்தில் பதிவேற்றல்

  ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் தமது பூர்வீக இடங்களை பற்றியும் யாழ் மண்ணின் கலாச்சார சிறப்பு பற்றியும் அறியும் வகையில் விபரங்களை திரட்டி தொகுத்து இணையத்தில் பதிவேற்றுதல் மற்றும் ஆதார வரலாற்று புத்தகமாக்கல்.

 • புலம்பெயர் தொழிலாளர்களுடன் இணைந்து புதிய தொழில் வாய்ப்புக்களை யாழ் மண்ணில் உருவாக்கல்

  புலம்பெயர் தொழில்தருநர்கள் மற்றும் புதிய முயற்சிகளில் ஆர்வமுள்ள யாழ் இளையோரை இணைத்து புதியவாய்ப்புகள் தமிழ் உறவுகளுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்தல்.

 • கலைசார்ந்து இயங்கும் யாழினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கல்

  கலைசார்ந்து இயங்கும் யாழ் இளையோருக்கு தமிழ்நாட்டில் வாய்ப்புகளை ஏற்படுத்த தொடர்புகளை உருவாக்குதல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி

யுத்தத்தினால் எமக்குக்கிடைத்த வாய்ப்பு உலகம் முழுதும் பரந்து விரிந்து வாழ்வது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இன்னமும் தாயகத்தில் கனவுகளுடன் வாழும் எமது சொந்த இனத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகளே இனிவரும் காலங்களில் காத்திரமானவை. குறிப்பாக யாழ் மக்களுடன் சீரான தொடர்ச்சியான உறவுகளை பேணி எதிர்காலத்தில் எதிர்வரும் பொருத்தமான முதலீட்டு மற்றும் வேலை வாய்ப்புகளிலெல்லாம் தமிழ் உறவுகளை வைத்து அழகு பார்ப்பது புலம்பெயர் தமிழ் உறவுகள் தாய்மண்ணிற்கு செய்யும் நன்றிக்கடனாகும்.

 • எம் மண்ணில் இருந்து கல்விக்காகவும் வைத்திய தேவைக்காகவும் வெளிநாடுகளுக்கு செல்வேருக்காக உதவிகள் கிடைக்க வழிகோலுதல்

  யாழ் மண்ணிலிருந்து படிப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக வெளிநாடுகள் செல்லும் தமிழ் உறவுகளை இணைக்கும் தளத்தினை உருவாக்கி போதிய உதவிகள் கிடைக்கும் வழிவகைகளை உருவாக்குதல்.

இத்திட்டம் தொடர்பான உங்களது எண்ணங்களையும், கருத்துக்களையும் இங்கே பதிவு செய்யுங்கள்.

சமர்ப்பி